நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி!
ADDED : 192 days ago
தெலுங்கு நடிகர் நானி தற்போது ஹிட் 3 படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ‛தசரா' பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் நானி 'தி பெரடைஸ்' படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே நானியுடன் கீர்த்தி ஷெட்டி ‛ஷியாம் சிங்கா ராய்' எனும் படத்தில் இணைந்து நடித்தார். தற்போது இரண்டாம் முறையாக இந்த ஜோடி இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.