உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்!

பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்!


நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னனி நடிகர்களின் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மறுபுறம் அவர் ‛அநீதி, ரசவாதி' சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனை பலுன் பட இயக்குனர் சினிஷ் அவரின் சோல்டர்ஸ் பேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். ஏற்கனவே இவர் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ‛பார்க்கிங்' எனும் சூப்பர் ஹிட் படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !