ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 190 days ago
'வேட்டையன்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான் என பலமொழி நடிகர்களும் நடித்துள்ளனர். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியில் என பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்தது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படத்தை திரைக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.