மார்ச் 27, 2026ல் வெளியாகும் 'பெத்தி' படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ADDED : 579 days ago
‛உப்பேனா' பட இயக்குனர் புஞ்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் அடுத்து அவரது 16வது படமாக 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இத்திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வரும் என க்ளிம்ஸ் வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.