ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் அப்டேட் தந்த செல்வராகவன்!
கடந்த 2010ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. இப்படம் வெளியான காலகட்டத்தில் பெரிதளவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால், பல வருடங்கள் கழித்து ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர்.
இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'ஆயிரத்தில் ஒருவன் 2' உருவாகுவதாக அறிவித்தனர். அதன் பின்னர் இப்படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இந்த நிலையில் தற்போது செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் தயாரிக்க ஒரு பெரிய நிறுவனம் இணைந்தால் கண்டிப்பாக உருவாகும். இந்த பாகத்தில் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் கார்த்தி இல்லாமல் இந்த பாகம் உருவாகாது. இரண்டு நடிகர்களும் ஒரு வருடம் கால்ஷீட் ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.