உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடி டீலிங் முடிந்த இட்லி கடை : என்ன விலை தெரியுமா?

ஓடிடி டீலிங் முடிந்த இட்லி கடை : என்ன விலை தெரியுமா?

தனுஷ் எழுதி இயக்கி, நடித்திருக்கும் படம் இட்லி கடை. அவருடன் அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஏப்ரல் 10 அன்று திரைக்கு வருமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட பணிகள் முடியாததால் அக்., 1க்கு ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இட்லி கடை திரைப்படத்தை இந்நிறுவனம் சுமார் 42 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் நடித்த படங்களிலேயே நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கிய திரைப்படம் இது தான் என்றும் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !