அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது!
ADDED : 227 days ago
கடந்த மாதத்தில் சமூக வலைதளத்தில் தனுஷ் இயக்கத்தில் அஜித் குமார் அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் பரவியது .இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதை ஆகாஷ் பாஸ்கரன் ஏற்கனவே தெரிவித்தார்.
தற்போது அஜித் கார் ரேஸில் பிஸியாக உள்ளார். மறுபுறம் தனுஷ் 'தேரே இஸ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பிற்காக பனாரசில் உள்ளார். இருவரும் ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்கு மேல் ஒரு தேதியை ஒதுக்கி சந்தித்து இந்த படத்தின் அடுத்த கட்டத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.