மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
149 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
149 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
149 days ago
நடிகர் திலகம் சிவாஜியின் பாரம்பரிய சென்னை வீடான 'அன்னை இல்லம்' இப்போது நீதிமன்ற வழக்கு, ஜப்தி உத்தரவு என சிக்கல்களை சந்தித்து வருவது சிவாஜி ரசிகர்களுக்கு பெரும் கவலையை உண்டாக்கி வருகிறது.
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த், ஈசன் புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு கம்பெனி தொடங்கி 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிக்க வாங்கிய 3 கோடி ரூபாய் கடன் தற்போது 9 கோடியாக வளர்ந்து நிற்கிறது. கடன் கொடுத்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சிவாஜி கணேசனின், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
'அன்னை இல்லம் எனக்கு சொந்தமானது. எனது தந்தை அதை எனக்கு எழுதி வைத்துவிட்டார். அதற்கு சகோதர சகோதரிகளும் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். அதனால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று பிரபு மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, ராம்குமாரின் கடனை தன்னால் அடைக்க முடியாது என்று பிரபு தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல, அன்னை இல்லத்தில் தனக்கு பங்கு எதுவும் இல்லை என்று ராம்குமார் தரப்பிலும் கூறப்பட்டது. இதையடுத்து, அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று பிரமாண மனுவை தாக்கல் செய்ய ராம்குமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்குமார் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பத்திரத்தில் “அன்னை இல்லத்தை எனது தம்பி பிரபுவுக்கு, என் தந்தை சிவாஜி கணேசன் எழுதி வைத்து விட்டார். அந்த வீட்டின் மீது எனக்கு எந்த பங்கும், உரிமையும் கிடையாது. எதிர்காலத்திலும், இந்த சொத்தின் மீது உரிமை கோர மாட்டேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து வழக்கை வருகிற 15ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.
149 days ago
149 days ago
149 days ago