சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல்
கமல்ஹாசன் அரசியல் கட்சி நடத்தினாலும், சினிமாவிலும் பிஸியாக இருக்கிறார். தக் லைப் படத்தை முடித்துவிட்டார். அடுத்து இந்தியன் 3யில் எஞ்சியுள்ள காட்சிகளில் நடிக்க போகிறார். இதுதவிர சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது அவரது 237வது படம்.
சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளை செய்தவர் கமல், மவுன படம், டிடிஎஸ் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் சினிமா என சினிமாவின் அடுத்த கட்டத்தை அவரே முன்னெடுத்திருக்கிறார். மக்கள் இன்னும் 10 ஆண்டுகளில் செல்போனில் படம் பார்ப்பார்கள் என்று அவர் சொன்னபோது யாரும் நம்பவில்லை. இப்போது அது நடந்திருக்கிறது.
இனி அடுத்தகட்டமான ஏஐ தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இது குறித்து கற்றுக்கொள்ள அமெரிக்கா சென்று வந்தார். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடந்து வரும் சினிமா தொடர்பான சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி என்ன செய்யலாம் என்று கமல்ஹாசன் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.