மேலும் செய்திகள்
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
148 days ago
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
148 days ago
விடாமுயற்சி படத்திற்கு பின் இந்தாண்டில் அஜித்தின் இரண்டாவது படமாக இன்று(ஏப்., 10) திரையரங்கில் வெளியாகியுள்ளது குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். அஜித்துடன் திரிஷா, பிரசன்னா, சுனில், சிம்ரன், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் தொடர்பான கதையில் படம் உருவாகி உள்ளது. அஜித்தின் முந்தைய ரவுடித்தனம் கலந்த கேங்ஸ்டர் படங்களான தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல கேரக்டர்களின் சாயல்கள் இந்த படத்தில் உள்ளது சமீபத்தில் வெளியான டிரைலர் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் எத்தனை தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இந்த திரைப்படம் சுமார் 963 தியேட்டர் வரை தமிழகத்தில் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஆயிரம் தியேட்டரை நெருங்கி திரையிட்ட படம் என்ற சாதனையை இந்த குட் பேட் அக்லி பெற்றுள்ளது.
விடாமுயற்சி படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஏற்ற படமாக குட் பேட் அக்லி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுக்க இப்படம் காலை 9 மணிக்கு வெளியானது. முதல் காட்சியை கொண்டாட்டமாக வரவேற்ற ரசிகர்கள் ஆட்டம், பாட்டு என கொண்டாடி தீர்த்தனர்.
148 days ago
148 days ago