ஓடிடி இழுபறியில் வீர தீர சூரன்
ADDED : 148 days ago
விக்ரம் நடித்து அருண் குமார் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். நல்ல விமர்சனத்தால் வரவேற்பையும் பெற்று, ஓரளவுக்கு வசூலையும் ஈட்டி லாப கணக்கில் சேர்ந்துள்ளது. அதேசமயம் இந்த திரைப்படம் வெளியாகி இன்று வரை ஓடிடி உரிமையில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் இப்படம் எப்போது ஓடிடி-யில் வரும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அமேசான் நிறுவனம் இந்த திரைப்படத்தை வாங்கியதாகவும் இன்னும் சரியான ஓடிடி விலை படியாததாலும் எப்போது வெளியாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஓடிடி நிறுவனத்துக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இன்னும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமை வேறு நிறுவனத்துக்கு விற்கவும் தயாரிப்பு நிறுவனம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.