உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு

ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு

நடிகையும், அரசியல்வாதியுமான கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியாக உள்ளார். இந்நிலையில் அதே தொகுதியில் நடைபெற்ற ஒரு பாஜக நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, மணாலியில் இருக்கும் எனது வீட்டிற்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. ஆனால் இந்த வீட்டில் நான் வசிக்கவே இல்லை. ஆளே இல்லாமல் அந்த வீடு பூட்டப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு இந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி மக்களை வஞ்சித்து வருகிறது. ஒரு எம்பியான எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள் நிலையை எண்ணி பாருங்கள் என்று ஒரு செய்தி வெளியிட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் கங்கனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !