உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல்

திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல்


மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் சமீபத்தில் 'எம்புரான்' திரைப்படம் வெளியானது. முதல் பாகமான 'லூசிபர்' போலவே மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெறும் என எதிர்பார்த்த நிலையில் வசூலில் ஓரளவு சாதித்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறியது. இந்த நிலையில் மோகன்லாலின் அடுத்த படமான 'தொடரும்' வரும் ஏப்ரல் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. 'ஆபரேஷன் ஜாவா' என்கிற படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய தருண் மூர்த்தி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மோகன்லாலுடன் ஷோபனா இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் சில வெளியானபோது அதை பார்த்துவிட்டு பலரும் இது திரிஷ்யம் பாணியில் இருப்பது போல தெரிகிறது என்று கூறி வந்தார்கள்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தருண் மூர்த்தி கூறும்போது, “நிச்சயமாக இது திரிஷ்யம் படம் போல திரில்லர் படம் அல்ல.. அதே சமயம் இது ஒரு பீல் குட் படமும் அல்ல.. இன்னும் சொல்லப்போனால் ஒரு மிஸ்டரி அல்லது இன்வெஸ்டிகேஷன் படம் கூட அல்ல. இது ஒரு பேமிலி டிராமா.. அதே சமயம் இரண்டாம் பாதியில் நீங்கள் எதிர்பார்த்த அந்த விறுவிறுப்பு இருக்கும். இது ஒரு மனிதனின் கதையை அவனது வாழ்க்கையில் சில நாட்கள் நடந்த நிகழ்வுகள் எப்படி அவனை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்றன என்பதை நகைச்சுவை, சோகம், அதிர்ச்சி, த்ரில் என எல்லாமும் கலந்து கொடுத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !