உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ?

அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ?


அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள படத்தை பான் வேர்ல்டு படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதனால், சர்வதேச அளவில் பிரபலமான கதாநாயகிகளைப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று தேடி வருகிறார்களாம்.

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவை அதற்காக அணுகி இருக்கிறார்கள். அவர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வருவதும் ஒரு காரணம். ஆனால், அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க 'நோ' சொல்லிவிட்டாராம்.

ராஜமவுலி படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடும் போதே படப்பிடிப்புக்கு அழைக்கப்படும் நாட்களில் வர வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். அதனால்தான் அவர் அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க 'நோ' சொன்னாராம். மேலும், ஹிந்தியில் 'க்ரிஷ் 4' படத்தில் நடிக்கவும் சம்மதம் சொல்லி இருக்கிறாராம் பிரியங்கா. இதனால், தேவையில்லாத சிக்கல் ஏற்பட வேண்டாம் என தவிர்த்திருக்கிறார்.

அல்லு அர்ஜுனுடன் இதற்கு முன் நடித்த நடிகைகளை ஜோடியாக்க வேண்டாம் என்று அட்லி சொல்லி வருகிறாராம். சர்வதேச பிரபல நடிகைகளைத் தேர்வு செய்வார்களா, அல்லது சமந்தா, ஜான்வி கபூர் என இந்தியப் பிரபலங்களையே தேர்வு செய்வார்களா என்பது விரைவில் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !