3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி'
அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 30 கோடி வசூலைக் கடந்தது. உலக அளவில் 50 கோடியைக் கடந்திருக்கும் என்று தகவல் வந்தது.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை படத்தின் வசூல் பாதியளவே இருந்ததாகச் சொன்னார்கள். அன்று வேலை நாள் என்பதால் வசூல் குறைந்தது. அதே சமயம் நேற்று விடுமுறை நாள் என்பதால் வசூல் மீண்டும் அதிகமாகி உள்ளது. நேற்றைய வசூலுடன் சேர்த்து படம் உலக அளவில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் 50 கோடி வசூல் உறுதி என்கிறார்கள். அதனால் நாளை முடிவில் 150 கோடி வசூலை 'குட் பேட் அக்லி' கடந்திருக்கும்.
அடுத்து மூன்று நாட்கள் வேலை நாட்கள் என்பதால் வசூல் குறையலாம். பின்னர் அதற்கடுத்த மூன்று நாட்கள் விடுமுறை நாள் என்பதால் வசூலை எதிர்பார்க்கலாம். அடுத்த வார முடிவில் 200 கோடிக்கும் அதிகமாகக் கடந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவில் ஒரு லாபகரமான படமாக 'குட்' வசூலில் இப்படம் நிறைவடையும்.