உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு

டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு

சூர்யா நடிப்பில் அடுத்து கருப்பு படம் வெளியாக உள்ளது. இதுதவிர வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சூர்யாவின் 47வது படத்தை இயக்குவது மலையாளத்தில் வெளியான 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ‛ழகரம்' என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார் என்கிறார்கள்.

இந்த படத்தில் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நஸ்லின் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் 8ம் தேதியன்று கேரளாவில் துவங்குகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா மீண்டும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

jay bheem
2025-11-20 13:50:44

in that money, at least 1 got school could have been revamped...tell your wife and dad. hope they didn't forgotten...