உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் 2026 மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகத்தினருக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான வேட்பாளர்கள் இப்போதே களத்தில் இறங்கிவிட்டார்கள்.

தற்போது தலைவராக உள்ள தேனாண்டாள் முரளி அடுத்து போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவரது அணியில் துணைத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் தமிழ்க்குமரன் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளாராம். செயலாளர்களில் ஒருவராக இருக்கும் ராதாகிருஷ்ணன் மீண்டும் செயலாளர் பதவிக்கே போட்டியிடுகிறாராம். மற்றொரு செயலாளர் பதவிக்கு கமீலா நாசர் போட்டியிட உள்ளார்.

மற்றொரு அணியாக இயக்குனர் லிங்குசாமியின் தம்பி சுபாஷ்சந்திர போஸ் தலைமையில் ஒரு அணி போட்டியிட உள்ளது. அந்த அணியில் துணைத் தலைவர் பதவிக்கு சேவியர் பிரிட்டோ, மதியழகன், செயலாளர் பதவிக்கு சவுந்தரபாண்டியன், பொருளாளர் பதவிக்கு மன்னன் ஆகியோர் களமிறங்க உள்ளார்களாம்.

ஏற்கெனவே, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்பது இந்த சங்கத்திற்குப் போட்டியாக உள்ளது. இதனால் தற்போதுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கியத்துவம் கடந்த சில வருடங்களில் குறைந்துள்ளதாக உறுப்பினர்களிடம் ஒரு குறை உள்ளது. இந்த சங்கத்தில்தான் நிறைய உறுப்பினர்களும், நிதியும் இருக்கிறது. இழந்த பெருமையை எந்த அணி மீட்டெடுப்போம் என்று உறுதியளிக்கிறதோ அந்த அணியே வெற்றி பெறும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !