உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்

ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்

'கனா காணும் காலங்கள்' வெப் தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஏகன். அதன்பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து ஆஹா கல்யாணம் வெப் தொடரை இயக்கிய யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார் என அறிவித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக கோர்ட் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீதேவி அப்பல்லா மற்றும் மின்னல் முரளி படத்தின் மூலம் பிரபலமான பெமினா ஜார்ஜ் என இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை ஜோ படத்தை தயாரித்த விசைன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !