பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன்
ADDED : 5 minutes ago
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என வலம் வருபவர் பிரேம்ஜி அமரன். நீண்டகாலமாக திருமணம் செய்யாமல் இருந்து வந்த இவர் தனது 45வது வயதில் கடந்தாண்டு ஜூன் மாதத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்தார். வீட்டில் மனைவிக்கு கிச்சனில் வேலை செய்து கொடுப்பது, அவர் துவைத்த துணியை வீட்டின் மொட்டை மாடியில் தான் காய போடுவது என்பது உள்ளிட்ட பல புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டு வந்தார். இதற்கிடையே இந்து கர்ப்பமானார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் இன்று(நவ., 19) பிரேம்ஜி - இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள். அப்பாவாகியிருக்கும் பிரேம்ஜிக்கு குடும்பத்தினர், திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.