உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம்

இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரேயா. ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை திருமணம் செய்த இவருக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இருப்பினும் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது பெயரை பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் மோசடி நடந்து வருவதாக ஸ்ரேயாவின் கவனத்திற்கு வந்தது.

இதையடுத்து அவர் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த முட்டாள் யார். இந்த நபர் என்னை போல என்னுடன் பணி செய்ய விரும்பும் நபர்களிடம் பேசுகிறார். இப்படி போலியாக குறுஞ்செய்தி அனுப்பி நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள். மக்களின் நேரம் வீணடிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமானது. இது நான் அல்ல, அது எனது எண் அல்ல'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !