அர்ஜூன் தாஸிற்கு விருது கிடைத்ததை மகிழ்ச்சியாக பகிர்ந்த சாந்தகுமார்!
ADDED : 176 days ago
கடந்த ஆண்டில் இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்து வெளியான படம் 'ரசாவதி'. இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த அளவிற்கு வசூல் ரீதியாக பெரிதளவில் வெற்றி படமாக அமையவில்லை.
இந்த நிலையில் 7வது நியூ ஜெர்ஸி இந்தியன் அன்ட் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் ரசாவதி படம் பங்கேற்றது. இதில் அர்ஜுன் தாஸிற்கு சிறந்த நடிகர் விருதை அறிவித்துள்ளனர். இதனை இயக்குனர் சாந்தகுமார் மகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.