இசை அமைப்பாளர் பயணம் தொடரும் : சக்திஸ்ரீ கோபாலன்
ADDED : 173 days ago
ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரித்து இயக்கிய 'டெஸ்ட்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார் பாடகி சக்திஸ்ரீ கோபாலன். படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது.
இசை அமைப்பாளராக மாறியது குறித்து சக்திஸ்ரீ கோபாலன் கூறியிருப்பதாவது: 'டெஸ்ட்' படத்தின் கதையை இசையின் வாயிலாக வடிவமைக்க ஒரு கூட்டு முயற்சியாளராக என்னை அழைத்துச் சென்றதற்காகவும், இந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்க எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும், இயக்குனர் சஷிகாந்திற்கும், சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. தொடர்ந்து நல்ல கலைஞர்களுடன், நல்ல கதைகளுடன் எனது இசை பயணம் தொடரும் என்றார்.