உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே

கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, அதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர மீண்டும் விஜய்யுடன் ஜனநாயகன், ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 4 போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், ‛‛ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்தது. அதன் காரணமாகவே அந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று சொன்னதும் உடனே ஒத்துக் கொண்டேன். ரஜினியுடன் நடித்த அனுபவம் ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. நான் ஆடிய இந்த பாடல் ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடலைக் போன்று இருக்காது. ஆனால் இது வேறு மாதிரியான பாடல். இதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. குறிப்பாக இந்த பாடலில் இடம் பெற்றுள்ள நடன அசைவுகள் அனைத்தும் ரொம்ப புதுசாக இருக்கும். ரசிகர்கள் தியேட்டரில் உற்சாக முழக்கமிடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் பூஜா ஹெக்டே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !