ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம்
ADDED : 187 days ago
வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'ஷிவாங்கி லையோனஸ்' திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. இந்த திரைப்படம் கடந்த மார்ச் 7ம் தேதி திரையரங்கில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் பெற்றது. இந்த சூழ்நிலையில் இப்படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது. தேவராஜ் பரணிதரன் இயக்கிய இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் பெரிய வெற்றியை தேடித்தரும் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.