ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம்
ADDED : 237 days ago
யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து ஸ்வினீத் சுகுமார் இயக்கிருந்த திரைப்படம் 'ஸ்வீட்ஹார்ட்'. இந்த திரைப்படம் மார்ச் 14 அன்று திரையரங்கில் வெளியாகியது. இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்ட பைவ் ஸ்டார் செந்திலுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் கடந்த வாரம் ஏப்ரல் 11 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் ஜொலிக்காமல் குறைவான பார்வையாளர்களை பெற்றதாக செய்திகள் வந்துள்ளது. இதனால் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த இந்த திரைப்படம் ஓடிடி தளத்திலும் படுதோல்வி அடைந்துள்ளது.