மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
142 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
142 days ago
ஜான் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் 2005 தமிழ்ப் புத்தாண்டில் வெளியான திரைப்படம் 'சச்சின்'.
20 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தை நாளை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்கிறார்கள். ஒரு புதிய படத்திற்குப் போலவே டிரைலர் ரிலீஸ், சிங்கிள்ஸ் ரிலீஸ் என இப்படத்திற்கு கடந்த சில வாரங்களாகவே செய்து வந்தார்கள்.
இந்த ஆண்டு விஜய் நடிக்கும் புதிய படம் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் விஜய் தற்போது நடித்து வரும் 'ஜனநாயகன்' படம் வெளியாகிறது.
இப்போது விஜய்க்கு அதிகமாக உள்ள ரசிகர்கள் என்றால் '2கே கிட்ஸ்' ரசிகர்களைச் சொல்லலாம். அவர்கள் 'சச்சின்' படம் வெளிவந்த போது குழந்தையாக இருந்திருப்பார்கள். அப்படத்தில் இடம் பெற்ற வடிவேலுவின் நகைச்சுவையை டிவியில் அதிகம் பார்த்திருப்பார்கள். பாடல் படம் வெளிவந்த சமயத்தில் ஹிட்டானது, அதன் பின் அதிகம் கேட்கப்பட்ட பாடலாக அமையவில்லை.
விஜய்யின் 'ரொமான்ஸ்' படங்களில் வந்த கடைசி படமாக இப்படத்தைச் சொல்லலாம். அதன்பின் ஆக்ஷன் பக்கம் முழுமையாகத் திரும்பி விட்டார் விஜய். இந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு காதல் கதைதான் 'சச்சின்'.
வெளிநாடுகளிலும் நிறைய தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடுகிறார்கள். தமிழகத்திலும் பல தியேட்டர்களில் படம் வெளியாகிறது. அப்போது பெரிய திரையில் பார்த்திராத ரசிகர்கள் இப்போது அப்படத்தை மீண்டும் வந்து விரும்பிப் பார்ப்பார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.
142 days ago
142 days ago