சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி
விடுதலை, கருடன் திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் சூரியின் சினிமா கேரியர் மாறி உள்ளது என்றே கூறலாம். தொடர்ந்து அவர் கதாநாயகனாக வலம் வந்து கொண்டியிருக்கிறார். சமீபத்தில் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சூரியுடன் ஐஸ்வர்ய லட்சுமி, ராஜ்கிரன், பாலா சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். வருகின்ற மே 16 அன்று திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் ஓடிடி உரிமையை விற்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. அதன் அடிப்படையில் ஹாட்ஸ்டார் நிறுவனத்தை அணுகி குறிப்பிட்ட விலைக்கு தயாரிப்பு நிறுவனம் கேட்டதாகவும் அதற்கு ஹாட்ஸ்டார் நிறுவனம் இவர்கள் கேட்ட தொகைக்கு ஒத்து வராமல் இழுபறியில் உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதனால் மாமன் படத்தின் ஓடிடி உரிமையில் இழுபறி நீடிக்கிறது. கூடிய விரைவில ஒரு சமரச முடிவு எட்டப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.