மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
143 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
143 days ago
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான 'சிக்கந்தர்' படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்து விட்டது. இந்த நிலையில் அடுத்தபடியாக மூன்று படங்களை எதிர்நோக்கி இருக்கிறார் ராஷ்மிகா. அதில் முதல் படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுசுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கும் குபேரா. ஜூன் மாதம் திரைக்கு வரும் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் அடுத்த வாரத்தில் தொடங்குகிறது. இதில் தனுசுடன் இணைந்து தானும் பல புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க போகிறார் ராஷ்மிகா மந்தனா.
அதையடுத்து பெண்களை மயமாகக் கொண்ட 'தி கேர்ள் ப்ரெண்ட்' என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. அதேபோல் ஹிந்தியில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார். திகில் நகைச்சுவை கலந்த கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. இந்த மூன்று படங்களுமே தனக்கு மிகப்பெரிய ஹிட் படங்களாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தான் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
143 days ago
143 days ago