'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்!
ADDED : 200 days ago
தெலுங்கில் வெளியான 'சலார்' படத்தில் பிரித்விராஜ்-ன் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கார்த்திகேயா தேவ். அதன் பின்னர் 'எம்புரான்' மற்றும் சமீபத்தில் அஜித்குமார் நடித்து தமிழில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்திற்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்த நிலையில் குட் பேட் அக்லி படம் வெளியாகுவதற்கு முன்பே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திகேயா தேவ் நடித்து வருகிறார் என புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.