உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ!

ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ!


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'ரெட்ரோ'. அவருடன் இணைந்து பூஜாஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். இப்போது இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு, யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இப்படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக உருவாகியுள்ளது என தணிக்கை சான்றிதழில் குறிப்பிட்டுள்ளனர்.

படத்தின் டிரைலரை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் எடிட் செய்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். மேலும், டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !