கேங்கர்ஸ் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
ADDED : 186 days ago
நீண்ட வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'கேங்கர்ஸ்'. இதற்கு சத்யா. சி இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடிக்கின்றார். ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதில் வழக்கமான சுந்தர்.சி படங்கள் போல் அதிகபடியான கிளாமர் மற்றும் இரட்டை அர்த்த வசனம் இடம்பெற்றுள்ளதால் இதற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது.