‛தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?
ADDED : 139 days ago
மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைப்'. இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இப்படம் வருகின்ற ஜூன் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதனால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகின்ற மே 16ம் தேதியன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.