உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் படத்திற்காக போட்டிருந்த செட்டில் தீ விபத்து!

தனுஷ் படத்திற்காக போட்டிருந்த செட்டில் தீ விபத்து!


நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் 'இட்லி கடை' இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் தற்போது சில நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இட்லி கடை படத்திற்காக ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த கிராமத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் பிரிக்காமல் இருந்த செட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறுகின்றனர். பலத்த காற்றின் காரணமாக தீ பற்றி எரிவதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றதாக கூறுகின்றனர். அந்த கிராமத்தில் படப்பிடிப்பு முடிந்ததால், தீ விபத்து ஏற்பட்டபோது, தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இல்லை என தகவல் உறுதிசெய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !