உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ்

இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் வேணு யெல்டாண்டி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனத்தின் தயாரிப்பில் ' எல்லம்மா' எனும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகனாக நானி நடிப்பதாக இருந்தது. தற்போது இந்த படத்தில் கதாநாயகனாக நிதின் நடிக்கவுள்ளார்.

இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே நிதின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ரங் டே எனும் படத்தில் இணைந்து நடித்தனர். இப்போது இரண்டாவது முறையாக ஜோடி சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !