உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது

சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது

ரெட்ரோ படத்தை முடித்துவிட்டு நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கிடையில் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது சூர்யாவின் 46 படமாக உருவாகிறது. இந்தியாவில் முதல் இன்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை குறித்த கதைகளம் என கூறப்பட்டது.

இப்படத்திற்கு வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நேற்று இந்த படத்திற்கான பாடல் இசையமைக்கும் பணியை ஜி.வி.பிரகாஷ் வெங்கி அட்லூரியுடன் துபாயில் தொடங்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !