உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்…

விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்…

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் என்ற போட்டி அடுத்த பொங்கலுக்குப் பிறகு இல்லாமல் போய்விடும். அப்போது வெளியாக உள்ள தனது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி தீவிர அரசியலில் இறங்க உள்ளார் விஜய். அதனால், இனி விஜய், அஜித் என்ற போட்டியை இனி பார்க்க வாய்ப்பில்லை.

இருந்தாலும் ரீ-ரிலீசில் அப்படி ஒரு போட்டியை இப்போது உருவாக்கிவிடுவோம் என சிலர் இறங்கியிருக்கிறார்கள். விஜய் நடித்த 'சச்சின்' படம் கடந்த வாரம் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வெளியானது. குறிப்பிடத்தக்க வசூலையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

அடுத்து அஜித் நடித்து 2014ல் வெளியான 'வீரம்' படத்தை அவரது பிறந்தநாளான மே 1ம் தேதியன்று ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார்கள். சச்சின் படத்திற்கு பாடல்களை மீண்டும் யு டியூபில் வெளியிட்டதைப் போல 'வீரம்' படத்திற்கும் வெளியிடுகிறார்கள். நேற்று 'வீரம்' படத்தின் 'ரத கஜ' பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

'சச்சின்' பட ரீ-ரிலீசால் கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பரித்து வருகிறார்கள். அதனால், தவித்து வந்த அஜித் ரசிகர்கள் அடுத்து 'வீரம்' ரீ-ரிலீசால் பதிலுக்கு இறங்குவார்கள். இருந்தாலும் அஜித் ரசிகர்கள் 'மங்காத்தா' ரீ-ரிலீசைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !