மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
140 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
140 days ago
ஒரே ஒரு நல்ல படத்தை இயக்கி விட்டு அதன்பின் காணாமல் போன பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரிந்தவர் 'அவள் அப்படித்தான்' ருத்ரையா. அவரைப்போல இன்னும் பலர் இருக்கிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் என்.எம்.மொஹிதீன். அவர் இயக்கிய படம் 'முடிவல்ல ஆரம்பம்'.
இந்த படத்தில் ராஜேஷ், ஜோதி, சரத்பாபு, குமரிமுத்து மாஸ்டர் ஹாஜா ஷெரீப் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். 'பாடிவா தென்றலே...', 'தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கை கொடுக்கும் காலமடி' ஆகிய புகழ்பெற்ற பாடல்கள் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது.
மலையோர கிராமம் ஒன்றில் டீக்கடை நடத்தும் ஒரு விதவை பெண்ணின் மகள் ராதா (ஜோதி), அந்த கடைக்கு அடிக்கடி டீ குடிக்க வரும் லாரி டிரைவர் கண்ணையாவோடு (ராஜேஷ்) காதல் கொள்கிறாள். ஒரு நாள் இரவு இருவரும் உடல்ரீதியாகவும் இணைந்து விடுகிறார்கள்.
இதனால் அவசர அவசரமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் டிரைவர் கண்ணையா காணாமல் போகிறான். கர்ப்பமான ராதா, ஊரை விட்டு ஓடி நகர்புறத்திற்கு வருகிறார். குழந்தையை பெற்று அதை ஒரு ஆசிரமத்தில் போட்டு விட்டு மறுநாள் அதே ஆஸ்ரமத்தில் நர்சாக வேலை செய்து கொண்டே தன் மகனையும் வளர்க்கிறாள். அவளுக்கு மட்டும் தன் மகன் அங்கு வளர்வது தெரியும்.
இந்த நிலையில் அந்த ஆஸ்ரமத்தில் பணியாற்றும் டாக்டர் சரத்பாபு, ராதாவை காதலிக்கிறார். இருவரும் தங்கள் காதலை சொல்ல இருந்த நேரத்தில் காணாமல் போன கண்ணையா கண்பார்வை இழந்தவராக அதே மருத்துவமனைக்கு வருகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
சிக்கலான கதை, சீரிய திரைக்கதை, என விமர்சகர்களால் போற்றப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. படத்தை இயக்கிய மொஹிதீன் பற்றியும் எந்த தகவலும் இல்லை.
140 days ago
140 days ago