18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய்
 
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இரு தினங்களுக்கு முன்பு தங்களது 18வது திருமண நாளைக் கொண்டாடி இருக்கிறார்கள். அன்று இன்ஸ்டா தளத்தில் தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ஒரே ஒரு 'ஹாட்டின்' எமோஜி மட்டுமே அந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து வரும் பிரிவு வதந்திகளுக்கு அவர் மீண்டும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
அப்பதிவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் லைக் செய்து வாழ்த்தியுள்ளார்கள். அதே சமயம், ஐஸ்வர்யாவின் அந்தப் பதிவை அபிஷேக் பச்சன் மறு பதிவு செய்யவில்லை என்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் ஒரு நெகட்டிவிட்டியைப் பரப்பியுள்ளார்கள்.
'பொன்னியின் செல்வன் 2' படத்திற்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடிக்கவில்லை. அபிஷேக் பச்சன் நடித்து கடந்த மாதம் 'பி ஹேப்பி' படம் வெளிவந்தது.