ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு
2018ல் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஹிந்தி படம் ‛ரெய்டு'. இந்த படத்தின் தொடர்ச்சியாக ‛ரெய்டு 2' உருவாகி உள்ளது. முதல்பாகத்தில் நடித்த அஜய் தேவ்கன், வாணி கபூர், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் இதிலும் தொடருகின்றனர். ராஜ் குமார் குப்தா இயக்கி உள்ளார். வருகிற மே 1ம் தேதி படம் வெளியாக உள்ளது. இதையொட்டி படக்குழுவினர் புரொமோஷன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் இந்த படத்திலிருந்து மணி மணி என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதை பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் எழுதி, பாடி, இசையமைத்துள்ளார். இந்த பாடலுக்கு யோ யோ ஹனி சிங் உடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் இணைந்து நடனமாடி உள்ளார். துள்ளல் பாடலாக வெளியாகி உள்ளது.
இந்தபாடல் வெளியீடு மும்பையில் ஒரு M2M-ல் மறக்க முடியாத வகையில் நடந்தது. இந்த நிகழ்வில் அஜய் தேவ்கன், யோ யோ ஹனி சிங், ஆமான் தேவ்கன், தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், கிருஷ்ண குமார் மற்றும் இயக்குனர் ராஜ் குமார் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.