எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு
ADDED : 165 days ago
பிரபாஸ் உடன் நடித்த சலார் படத்திற்கு பிறகு தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் ட்ரெயின் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் தனது தந்தையான கமல்ஹாசனுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் ஸ்ருதிஹாசன். அதோடு, எனக்கு ஒளியும், சக்தியும் அளித்து வரும் என் சிரிப்புக்கு காரணமாக உங்களை அதிகமாக நேசிக்கிறேன் அப்பா என்றும் ஒரு பதிவு போட்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த பதிவுக்கும், அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கும் லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.