உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி

விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி

அமரன் படத்திற்கு பிறகு தெலுங்கில் நாகசைதன்யாவுடன் தண்டேல் என்ற படத்தில் நடித்த சாய் பல்லவி, ஹிந்தியில் தற்போது ராமாயணா என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில், ‛‛எனக்கு விருதுகள் முக்கியமல்ல ரசிகர்கள்தான் முக்கியம். நான் நடிக்கும் கதாபாத்திரங்களின் எமோஷனல் உணர்வுகளுடன் அவர்கள் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் எனக்கு கிடைக்கிற உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். அப்படி ரசிகர்களை கதாபாத்திரங்களுடன் இணைத்துக் கொள்ளும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். அதைதான் எனக்கு கிடைக்கும் உண்மையான வெற்றியாக, விருதாக நான் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !