அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ்
ADDED : 211 days ago
சுந்தர் சி எழுதி இயக்கிய ‛கேங்கர்ஸ்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர் சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகும் முன்பு வரை எந்த ஓடிடி தளம் இந்த திரைப்படத்தை வாங்கியது என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால் இப்போது இந்த திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் படத்திலேயே அமேசான் நிறுவனம் ஓடிடி பார்ட்னர் என்ற அறிவிப்புடன் வருகிறது. இதனால் இந்த கேங்கர்ஸ் திரைப்படத்தை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த அடிப்படையில், எவ்வளவு விலைக்கு வாங்கியுள்ளது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.