உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி

தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி

தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி திரைக்கு வந்து 70 கோடி வசூலித்தது. இந்நிலையில் அடுத்து ஹிந்தியில் தனுஷ் நடித்துள்ள தேரே இஷ்க் மெயின் என்ற படம் வருகிற 28ம் தேதி வெளியாக உள்ளது. ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக கிர்த்தி சனோன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் டிரைலரை வெளியிட்டனர். காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கல்லூரி மாணவர், போர் விமானி என இருவிதமான கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்திருக்கிறார். தனுஷ், கிர்த்தி சனோன் காதலிக்கின்றனர். ஒருக்கட்டத்தில் அவர்கள் பிரிய அதன்பின் என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை. ஹிந்தியில் மட்டுமே டிரைலர் வெளியாகி உள்ளது. வெளியான 20 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 1 கோடி பார்வைகளை நெருங்கிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !