உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம்
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டிராகன் என்ற படத்தில் நடித்தவர் கயாடு லோஹர். அதைய டுத்து தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வருபவர், தெலுங்கு, மலையாளத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில், உருவக்கேலி குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், சோசியல் மீடியாவில் திரைபிரபலங்களை கண்டபடி விமர்சிக்கிறார்கள். இன்றைய தருவாயில் அதுபோன்று விமர்சனங்களில் இருந்து யாரும் தப்ப இயலாது. என்றாலும், யாராக இருந்தாலும் மற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். காரணம் எல்லோருக்கும் உடல்கட்டு ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், அனைவருக்கும் ஒரே மாதிரியான இருந்தால் ஒரு தனித்துவம் என்பதும் இல்லாமல் போய்விடும் என்றும் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார்