வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்!
ADDED : 230 days ago
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த ‛வேட்டையன்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் பஹத் பாசில். அவரது கதாபாத்திரம் தான் அந்த படத்தை கலகலப்பாக கொண்டு சென்றது. இந்த நிலையில் தற்போது ‛கூலி' படத்தை அடுத்து மீண்டும் நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தில் ஏற்கனவே ஜெயிலர் படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் ஆகியோர் அதே வேடங்களில் நடிக்கும் நிலையில், அப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது வேட்டையன் படத்தை தொடர்ந்து இந்த ஜெயிலர்- 2 படத்தில் பஹத் பாசிலும் ரஜினியுடன் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் ரஜினி, பஹத் பாசில் கதாபாத்திரங்கள் எதிரும் புதிருமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.