புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா!
ADDED : 192 days ago
‛லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, முத்தழகு' உள்ளிட்ட பல டிவி தொடர்களில் நடித்தவர் வைஷாலி தனிகா. ‛சங்கிலி புங்கிலி கதவ தொற, காதல் கசக்குதய்யா, கடுகு, பா .பாண்டி, சர்க்கார்' என பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சத்யதேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட வைஷாலி, தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் புதிய பிராண்ட் காரை ஷோரூமுக்கு சென்று வாங்கியுள்ளார். அதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வைஷாலி வெளியிட்டதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.