மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
160 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
160 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
160 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
160 days ago
தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ஹிட் 3 படம் வருகின்ற மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் நானி கலந்து கொண்டு வருகிறார் . அப்போது ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, 'மேற்கத்திய திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட சினிமா யுனிவர்ஸ் இப்போது இந்தியாவில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் லோகேஷ் கனகராஜ், பிரசாந்த் வர்மா போன்ற இயக்குநர்கள் இதில் முன்னணியில் இருக்கின்றனர்.
மக்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் அல்லது ஒரு படத்தைச் சுற்றி உற்சாகத்தை உருவாக்கும் எதுவும் சினிமாவுக்கு நல்லது என நம்புகிறேன். நான் ஏற்கெனவே HIT போன்ற சினிமா யுனிவரசில் இணைந்துவிட்டேன். அதேப்போல லோகேஷ் கனகராஜின் படைப்புகளும் மிகச் சிறப்பாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் படைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் ஏதாவது நடந்தால், நானும் அவருடைய சினிமா உலகில் இணைவது நடக்கும். அதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்றார்.
160 days ago
160 days ago
160 days ago
160 days ago