உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா?

விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா?

பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் சார்மி கவுர் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தபு இணைந்துள்ளார் என சமீபத்தில் அறிவித்தனர். மேலும், இதில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள்.

இத்திரைப்படம் பான் இந்திய படமாக உருவாகுவதால் இந்த படத்தின் தலைப்பு பொதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக கதைக்கும் பொருந்தும் வகையில் 'பெக்கர்' என தலைப்பு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !