மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
158 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
158 days ago
தலைப்பைப் பார்த்து குழம்ப வேண்டும், அது ஒரு ரைமிங்கிற்காக வைக்கப்பட்டது. அதாவது, 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' மற்றும் 'காக்க காக்க' ஆகிய படங்கள் விரைவில் ரீரிலீஸ் ஆக உள்ளன.
ராஜீவ் மேனன் இயக்கத்தில், மம்முட்டி, அஜித், அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு, ஷாமிலி மற்றும் பலர் நடிப்பில் 2000ம் ஆண்டில் வெளிவந்த படம் 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்'. அப்போதே மல்டி ஸ்டார் காம்பினேஷனில் வெளிவந்த ஒரு கிளாசிக் காதல் படம். வசூல் ரீதியாக அள்ளிக் குவிக்கவில்லை என்றாலும் அவ்வளவு நட்சத்திரங்களுடன் ஒரு படத்தைப் பார்த்த அனுபவமே அப்போது தனியாக இருந்தது. ஏஆர் ரஹ்மான் இசையில் அனைத்துப் பாடல்களும் அற்புதமாக அமைந்த ஒரு படம். அந்தப் படத்தை ரீரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இறங்கியுள்ளாராம்.
இன்று நடந்த 'சச்சின்' ரீரிலீஸ் சக்சஸ் மீட்டில் இது பற்றி தெரிவித்தார். அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சூர்யா, ஜோதிகா நடிப்பில் 2003ல் வெளிவந்த 'காக்க காக்க' படத்தையும் ரீரிலீஸ் செய்யப் போகிறாராம். இதற்கடுத்து 2026ம் ஆண்டில் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து 2016ல் வெளிவந்த 'கபாலி' படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவையெல்லாம் ரீரிலீஸ் பட்டியல். தனது புதிய தயாரிப்பான மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'டிரெயின்' படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
158 days ago
158 days ago