நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் கே.எஸ். அதியமான்!
ADDED : 157 days ago
தமிழில் ‛தொட்டான் சிணுங்கி, தூண்டில்' ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ். அதியமான். அதன் பின்னர் ஹிந்தி படங்களை இயக்கி வந்தார். கடந்த சில வருடங்களாக இவர் இயக்குனராக எந்தவொரு படங்களையும் இயக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். தமிழில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் ரேவதி, விதார்த் மற்றும் லிஜோ மொல் ஜோஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.